சென்னை : தமிழகத்தில் தங்கம் விலை கடந்த இரு நாட்களாக பெரும் ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் காலையில் பெரும் உயர்வு ஏற்பட்டு, மாலையில் திடீர் சரிவு ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
இந்தத் தாறுமாறான விலை மாற்றம் நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.நேற்று காலை 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400க்கும், ஒரு சவரன் ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200க்கும் விற்பனையானது. ஆனால் அதே நாள் மாலையில் விலை சரிந்து 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.400 குறைந்து ரூ.15,000க்கும், ஒரு சவரன் ரூ.3,200 குறைந்து ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.15,050க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400க்கும் விற்பனையாகிறது. அதேபோல் 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.12,570க்கும், ஒரு சவரன் ரூ.800 உயர்ந்து ரூ.1,00,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.315க்கும், ஒரு கிலோ ரூ.3,15,000க்கும் விற்பனையாகிறது.உலக அளவிலான பொருளாதார நிச்சயமின்மை மற்றும் புவி அரசியல் பதற்றம் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருவதால், நகை வாங்குவோர் தங்கள் முடிவை எடுப்பதற்கு முன் சந்தை நிலவரத்தை உன்னிப்பாகக் கவனிக்குமாறு வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
