"சிலருக்கு எடுக்கிற மனசு தான் இருந்தது, கொடுக்கிற மனசு இல்லை" – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

Dairy Minister Rajendra Balaji in Virudhunagar district said that some people had the mind to take and not the mind to give.

சில பேருக்கு எடுக்கிற மனசு தான் இருந்தது, கொடுக்கிற மனசு இல்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு, அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். அதன்பின் பேசிய அமைச்சர்,“சில பேருக்கு எடுக்கிற மனசு தான் இருக்கின்றது எனவும், கொடுக்கிற மனசு இல்லை”என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், மக்கள் வரிப்பணம் அவர்களின் கஷ்ட நேரங்களில் உதவ வேண்டும் என்பதற்காகவே முதல்வர் பழனிசாமி ரூ.2,500-ஐ பொங்கல் பரிசாக வழங்குகிறார் எனவும், இந்தியாவில் இதுவரை எந்த மாநில முதல்வர் அறிவிக்காத திட்டம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.