சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலையானது தொடர்ந்து அதிரடியாக மாற்றம் கண்டு வருகிறது. நேற்று நண்பகலில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, இன்று காலை நிலவரப்படி மீண்டும் சற்று குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மத்தியில் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய (ஜூலை 01, புதன்கிழமை) சந்தை நிலவரப்படி தங்கத்தின் விலை மற்றும் வெள்ளி விலை விபரங்கள் பற்றி பார்ப்போம்.
சென்னையில் நேற்று நண்பகலில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,600 என்ற உயர் விலையில் விற்பனையான நிலையில், இன்று காலையில் அதிரடியாகச் சரிந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம் விலை பொறுத்தவரையில், ரூ.100 குறைந்து, ரூ.13,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் தங்கம் விலை பொறுத்தவரையில் ரூ.800 குறைந்து, ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய காலை விலை நிலவரத்தோடு ஒப்பிடும்போது, தங்கம் விலை சற்று உயர்வுடனும், நேற்று நண்பகல் உச்ச விலையோடு ஒப்பிடும்போது சற்று குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலையில் மாற்றங்கள் இருந்தபோதிலும், வெள்ளியின் விலை சற்று உயர்வாகவே பதிவாகியுள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
