கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துதல், பயனாளர்களை முறையாக தேர்வு செய்தல் உள்ளிட்டவை தொடர்பாக அமைச்சர்களுடன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 1.48 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். விடுபட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட முகாம்கள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
