முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு பேரவையில் நிறைவேறியது.
முத்திரைத்தாள் கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேறியது. கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட திருத்த முன்வடிவு பேரவையில் நிறைவேறியது.
100 ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் 1,000 ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் உயருகிறது. நிறுவன ஆவணங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணமும் மாற்றியமைக்கப்பட்டு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தாக்கல் செய்திருந்த 2023 இந்திய முத்திரை திருத்த சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.