அமைச்சர் ஒருவர் தலைமையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு மணிப்பூரில் செல்ல திட்டம்.
கடந்து சில மாதங்களாகவே மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த சமயத்தில் மணிப்பூரில் இரண்டு பழங்குடியின இளம் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
கடந்த மே மாதம் 4-ம் தேதி இந்த சம்பவம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூரில் வன்முறையால் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் வெளி ஊர்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், மணிப்பூரில் 4 ஆயிரம் தமிழர்களின் நிலையை அறிய அம்மாநிலத்திற்கு தமிழக அரசின் குழு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் ஒருவரின் தலைமையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு மன்னிப்பு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள தமிழர்களின் நிலை பற்றி அம்மாநில அரசுடன் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
