தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்.
அம்மா உணவகங்கள் மூலம் தரமான சுகாதாரமான உணவு வழங்கப்படும்.
அரிசி, பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு.
21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு.
கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் .
அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்பதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.
அத்தியாவசிய பொருட்களுக்காக வெளியே சென்றால் சமூக விலகலை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் .
சாதி ,மத ,இன வேறுபாடுகளை கடந்து கொரோனாவை விரட்ட உறுதியேற்போம்.
பொறுப்பான குடிமக்களாக இருந்து சமூதாயத்தை காப்போம்
ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி
கொரோனாவிற்கு எதிராக போராடி தமிழகத்தையும் , தமிழ்மக்களையும் காக்க உறுதியேற்போம்.
கொரோனாவில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற நாம் அனைவரும் ஒன்றாக இந்த 21 நாட்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா வைரஸானது நேரடியாக கைகள், தும்மல், இருமல் மூலம் பரவுகிறது.
தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் 10,518 படுக்கையறைகள் இதற்காக மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன.
3,850 கோடி நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நோயின் தீவிரத்தை அறிந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.