பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி போராட்டம்..! சாலையில் பாலைக் கொட்டிய பால் பண்ணையாளர்கள்..!

மதுரையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டம்.

மதுரையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டம்.

மதுரையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் பண்ணையாளர்கள் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி, சக்கரைப்பட்டி கிராம பகுதியில் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு பால் உற்பத்தி நலச்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

unknown node

அதில் பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேலத்தில் மக்களுக்கு பால் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உற்பத்தியாளர்கள் போராட்ட முறையை மாற்றியுள்ளனர். விவசாயிகள் சாலையில் பாலை கொட்டியபோது, ஒரு சிலர் தங்கள் மாடுகளை சாலையில் கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

unknown node

விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால், பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல், குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டாரத் தலைவர் தெரிவித்தார்.