சென்னை அண்ணா சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில், டிஎம்எஸ் வளாகத்திற்கு எதிரே, பாதாள சாக்கடை அளவிற்கு, சரியாக ஒரு அடி அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பல்லாம் 10 அடி ஆழத்தில் உள்ளதாகவும், சரியாக நேற்று மாலை 7:30 மணியளவில் இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளம், ஒரு ஆட்டோ ட்ரைவர் சென்று கொண்டிருக்கும் போது, அந்த பள்ளத்தில் ஆட்டோ டிரைவரின் முன்புற டயர் அந்த பள்ளத்தில் சிக்கியுள்ளது. இதனையடுத்து அவர் அதை சரி செய்துவிட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார், அப்பகுதியில் போக்குவரத்தை தடுத்து, மாற்று பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தேனாம்பேட்டையில், மெட்ரோ ரயிலுக்கான வேலைகள் நடைபெற்று வருகிற நிலையில், இப்பள்ளம் ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என புகார் எழுந்துள்ளது. கடந்த ஏப்ரல் 5ம் தேதி இதே அண்ணா சாலையில், மேம்பாலத்தின் அருகே இதுபோன்று ஒரு பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஏற்பட்டுள்ள பள்ளம் குறித்து பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…