#BREAKING: சர்க்கரை அட்டைகளை.. அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்.. தமிழக அரசு அறிவிப்பு..!

Appropriate steps will be taken to convert sugar family cards into rice family cards on the basis of merit.

உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது வினியோகத் திட்டத்தில் தற்போது 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகள் ஆக மாற்றம் செய்ய விரும்பினால் அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து இன்று முதல் 20ஆம் தேதி வரைwww.tnpds.gov.inஎன்ற இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு சர்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.