கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக 3 பேரும் சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜனின் நண்பரும், அப்போதைய அதிமுக மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளருமான கர்சன் செல்வம் உள்ளிட்ட 3 பேருக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி, கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக 3 பேரும் சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் பிப்ரவரி 7-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.