செந்தில் பாலாஜி வழக்கு – நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி, மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள்

senthil balaji bail

செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி, மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், நாளையும் நடைபெற உள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை வாதங்களை முன் வைப்பதற்காக நாளையும் உச்ச நீதிமன்றம் சிறப்பு ஏற்பாடாக விசாரணையை நடத்துகிறது. வழக்கில் நாளையும் வாதங்களை முன்வைக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இன்று இவ்வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அந்த வாதத்தில், செந்தில் பாலாஜி ஒருநாளைக்கு ஒரு சில மணி நேரம் மட்டும் விசாரணை நடத்தலாம். 15 நாட்களுக்கு மேல் அமலாக்கத்துறைக்கு போலீஸ் காவல் கோர உரிமையில்லை. கோர்ட் உத்தரவின் பேரில் மட்டுமே போலீஸ் காவல் வழங்கப்படும். நீதிமன்றத்தை அனுமதி பெற்று விசாரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், நீதிமன்ற காவலில் உள்ளவரை விசாரிக்க கூடாது என யாரும் கூறவில்லை. செந்தில் பாலாஜி தற்போதும் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விகாரத்தை பொறுத்தவரை அவர் நாட்டை விட்டு பறந்துபோக கூடியவர் கிடையாது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நாளை வாதங்களை முன்வைக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி, வழக்கை ஒத்திவைத்தது.