பேரறிவாளன் பரோல் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு – உச்சநீதிமன்றம் உத்தரவு

The Supreme Court has extended the parole of Perarivalan by one week

பேரறிவாளனின் பரோலை ஒரு வார காலம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்கு இடையில் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .ஆனால் இந்த தீர்மானத்துக்கு  தமிழக ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

மறுபுறம் உச்சநீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது,பேரறிவாளனின் பரோலை ஒருவாரம் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விரிவாக விசாரிக்கும் வகையில் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.