சனாதன சர்ச்சை பேச்சு.! தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

Minister Udhayanidhi stalin - Supreme court of India

கடந்த செப்டம்பர் மாதம் சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் “சனாதன ஒழிப்பு மாநாடு” என்பது நடைபெற்றது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சேகர் பாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, “டெங்கு, மலேரியா போல சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்தது. உதயநிதிக்கு எதிராக வழக்குகளும் பதியப்பட்டன.

பெண்களே வாருங்கள் உலகமே உங்களுக்காக காத்திருக்கிறது… முதலமைச்சர் ஸ்டாலின் உரை!

ஜெகநாதன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தார். ஒரு மாநில அமைச்சராக மக்கள் பொறுப்பில் உள்ள ஒருவர் அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசியுள்ளார். உடன் இந்து அறநிலையத்துறை அமைச்சரும் இருந்துள்ளார். இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, தனிநபர் அளித்த புகாரின் பெயரில் அமைச்சர் மீது உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. அமைச்சர் பேசியதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என கூறியது.

இருப்பினும், அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இவ்வாறு பேசியதற்கு தமிழக அரசு 4 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்ற அமர்வு.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்