கூடுதல் கட்டணம் – தனியார் பள்ளிகளை கண்காணிக்க உத்தரவு!

தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலை பள்ளிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, தனியார் பள்ளிகளை கண்காணிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.