நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து லக்னோ கேப்டன் ‘கே.எல்.ராகுல் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 1-ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு காலில் அடிபட்டது. காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக இந்த சீசனில் வரும் அடுத்தடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா..? என்கிற கேள்வி எழும்பியது. இந்நிலையில், அவரை பரிசோதனை செய்து ஸ்கேன்கள் நடத்தப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக அவரது தசைநார் ஒரு குறிப்பிடத்தக்க கிழிந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தசைநார் கிழிந்துள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கே.எல்.ராகுல் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக லக்னோ அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கே.எல்.ராகுல் இல்லாததை லக்னோ அணி மிகவும் மிஸ் செய்வதாகவும், அவர் விரைவில் திரும்புவார் என்று நம்புகிறோம் எனவும் லக்னோ அணி தெரிவித்துள்ளது.
unknown nodeநடப்பு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், அவருக்கு பதிலாக லக்னோ அணியை க்ருனால் பாண்டியா வழிநடத்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
