உபரி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்யக்கூடாது – பள்ளிக்கல்வித்துறை

உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.

உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை.

பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை:

unknown node

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கல்வியாண்டின் இடையில் உபரி ஆசிரியர்களை மாற்ற வேண்டாம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்ததால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக வழக்கு:

இதனிடையே, காஞ்சிபுரத்தை சேர்ந்த மரியா அக்சிலியம் பள்ளி, டாக்டர் கேகே நிர்மலா மகளிர் பள்ளி தொடர்ந்த வழக்கில், அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

unknown node

மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அரசாணையை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. ஒரு குழுமம் நடத்தும் பள்ளியின் உபரி ஆசிரியர்களை அதே குழுமத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டும். நீதிமன்றத்தில் தெரிவித்த கால அவகாசத்தை பின்பற்றவில்லை, ஆட்சேபம் தெரிவிக்க அவகாசமும் வழங்கவில்லை என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.