செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர்..! அடித்துச் செல்லப்பட்ட கார்..!

Semparampaakkam

தமிழகத்தில் பருவமழை  தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், டிசம்பர் 2, 3 தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, வீராணம், தேர்வாய், கண்டிகை ஆகியவற்றில் நீரின்மேட்டம் உயர்ந்துள்ளது. 

2 நாட்கள் பயணமாக துபாய் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு..!

இந்த  நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் உபரி நீர் திறப்பு அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு நேற்று 6000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று உபரிநீர் திறப்பு 3,000 கன அடியாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் தரப்பாக்கம் அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. காரில் இருந்த 3 பேரையும் அப்பகுதி மக்களின் உதவியுடன் மாங்காடு போலீசார் கயிறு கட்டி பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்