செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அதிகளவில் பரவி வருவதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தற்போது நிலவிவரும் காலச்சூழல் காரணமாக ‘ஐவிஎப்’ எனும் செயற்கை கருத்தரித்தல் மையங்கள், காளான்கள் போல் உருவெடுத்துள்ளதாகவும், மேலும் நெறியற்ற முறையில் பரவி வருவதாகவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் வாடகைத்தாய் தொடர்பாக சட்டப்படி சான்றிதழ் பெற, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட மருத்துவ வாரியங்கள் அமைக்கப்படவேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி கூறினார். நெல்லை தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற, கருத்தரித்தல் மையத்தை அணுகியபோது சான்றிதழை பெற்று வருமாறு கூறப்பட்டதால், தமிழ்நாடு அரசின் மருத்துவ வாரியம் மூலம் சான்றிதழ் வழங்க வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், காலச்சூழல் காரணமாக ‘ஐவிஎப்’ எனும் செயற்கை கருத்தரித்தல் மையங்கள், காளான்கள் போல் உருவெடுத்து நெறியற்ற முறையில் பரவி வருவதாகவும், இது குறித்து விழிப்புணர்வை மாநில அரசுகள் ஏற்ப்படுத்த வேண்டும் எனவும், மாவட்டம் வாரியாக மருத்துவ வாரியங்கள் அமைக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.