சந்தேக மரணங்கள்.. பிரேத பரிசோதனைகளை வீடியோ பதிவு செய்ய உத்தரவு!

எதிர்காலத்தில் சந்தேக மரணத்தில் பிரேத பரிசோதனை செய்வது குறித்து வழிமுறைகளை உத்தரவுகளாக பிறப்பிப்பு.

எதிர்காலத்தில் சந்தேக மரணத்தில் பிரேத பரிசோதனை செய்வது குறித்து வழிமுறைகளை உத்தரவுகளாக பிறப்பிப்பு.

சந்தேக மரணங்கள் :

சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர் ரமேஷ் என்பவரின் மரணம் தொடர்பான வழக்கில், சந்தேக மரணங்களில் பரிசோதனை குறித்து மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பிறப்பித்து ஐகோர்ட் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.

சிபிசிஐடிக்கு மாற்றம்:

மதுரை பேரையூரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் சகோதரர் சந்தோஷ் தொடர்ந்த வழக்கை விசாரித்து உத்தரவிட்டுள்ளது. 2020-ல் சகோதரர் ரமேஷை போலீசார் அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டதாக சந்தோஷ் வழக்கு தொடுத்திருந்தார். ரமேஷ் உடலை மறு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தார்.

சட்டபூர்வ தீர்வு:

மேலும் இவ்வழக்கில் சந்தேக மரணங்களில் பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை இறந்தவர்களின் குடும்பத்திடம் வழங்க வேண்டும் என்றும் அறிக்கையின் நகல் மற்றும் வீடியோ ஆகியவை ஓரே நேரத்தில் குடும்பத்தினரிடம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினர் உடனே சட்டபூர்வ தீர்வுகளை நாடுவதற்கு இது பெரிதும் உதவும்.

விசாரணை அதிகாரி:

சந்தேக மரணம் என புகார் எழுந்ததால் உடற்கூராய்வின்போது விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். எதிர்காலத்தில் சந்தேக மரணத்தில் பிரேத பரிசோதனை செய்வது குறித்து வழிமுறைகளை உத்தரவுகளாக பிறப்பிக்கப்பட்டது. மேலும், உடற்கூராய்வு நடத்தும் மருத்துவ நிபுணர் மெமரிக்கார்டு மற்றும் கேசட்டை விசாரணை அதிகாரிக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அதிகாரி அதை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.