தமிழக பட்ஜெட் 2025 : 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள்… வேலைவாய்ப்பு குறித்த குட் நியூஸ்!
விழுப்புரம் சாரம், கரூர் நாகம்பள்ளி, தஞ்சை-நடுவூர் உள்ளிட்ட மொத்தம் 9 இடங்களில் ரூ.3,566 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒதுக்கீடு செய்யப்படும் தொகை பற்றிய விவரங்களை அறிவித்து வருகிறார். அதில் பலருக்கும் வேலை கிடைக்கும் வகையில் சில அறிவிப்புகளும் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, மதுரை, கடலூரில் ரூ.250 கோடியில் காலணித் தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, தொழில்மயமாக்கல், முதலீடுகளை ஊக்குவித்து தொழில் வளர்ச்சி அடையும் நோக்கில் 9 இடங்களில் ரூ.3,566 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டைகள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 17,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
காஞ்சிபுரம்-திருமுடிவாக்கம், மதுரை கருத்தபுளியம்பட்டி, விழுப்புரம் சாரம், கரூர் நாகம்பள்ளி, தஞ்சை-நடுவூர், திருச்சி சூரியூர், நெல்லை-நரசிங்கநல்லூர், ராமநாதபுரம் தனிச்சியம் ஆகிய இடங்களில் இந்த SIPCOT-க தொழிற்பேட்டைகள் அமையவுள்ளன.
ஓசூரில் ரூ.400 கோடி செலவில் 5 லட்சம் சதுர அடியில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. ஐடி & ஐடிஎஸ் நிறுவனங்களை ஊக்குவித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதன் நோக்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டங்கள் தமிழ்நாட்டின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதே காட்டுகிறது.