தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு.!

தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் சரியாக 5 மணிக்கு முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. தற்போது அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது. கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீடிப்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடப்படுகிறது.