மத்திய அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை!

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து பல தரப்பினரும் இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து பல தரப்பினரும் இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அளித்த உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.