தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் கூட்டணி தொடரும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து.
புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும் என கட்சியினரை ஊக்குவிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியிருப்பார் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதில் எந்த தவறும் இல்லை என்றும் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் கூட்டணி தொடரும் எனவும் நாராயணசாமி தனது கருத்தை கூறியுள்ளார்.
புதுவையில், எஸ்.பி. சிவக்குமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரியில் திமுக ஆட்சி அமையும். தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. திராவிட இலக்கியத்தின் தலைநகரம் என புதுச்சேரியை கூறலாம் என கூறியிருந்தார்.