மத்திய அரசு அறிவித்தபடி மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு அதாவது மே 17 வரை நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் விதித்த கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சிவப்பு , ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மத்திய அரசு அளித்த தளர்வுகளை பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் மத்திய அரசு அறிவித்தபடி மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடடதக்கது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…