இமாச்சல பிரதேசத்துக்கு தமிழக அரசு உதவும் – முதல்வர் உறுதி

கனமழையால் இமாச்சல பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கவலைப்படுவதாக முதலமைச்சர் ட்வீட்.

mk stalin

கனமழையால் இமாச்சல பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து கவலைப்படுவதாக முதலமைச்சர் ட்வீட்.

வட மாநிலங்களில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக, இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இமாச்சல பிரதேசத்தில் பலத்த மழையால் மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மண்டி மாவட்டத்தில் உள்ள பஞ்ச வக்த்ரா கோவில் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. பாதுகாப்பு கருதி 700-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும், நிலச்சரிவில் ஒரு கிராமமே மண்ணோடு மண்ணாக புதைந்து போனது.

எனவே, பலத்த மழையால், இமாச்சல் பிரதேசம் மாநிலம் ஸ்தம்பித்து போகியுள்ளது. இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பான முதலமைச்சர் பதிவில், இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து வரும் மழைக்காட்சிகள் ஆழ்ந்த கவலை அளிக்கின்றன.

இமாச்சலத்தில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்டுள்ள பேரழிவு கவலை அளிக்கிறது. எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் குடும்பத்தினருடன் உள்ளன. கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சல பிரதேசத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் இமாச்சல பிரதேச சகோதர, சகோதிரிகளுக்கு தமிழ்நாடு துணை நிற்கும் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.

unknown node