ஒரு மணி நேர மழை… தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை … என சென்னை வெள்ளம் குறித்து கமலஹாசன் ட்வீட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
நேற்று சென்னையில் பரவலாக பல்வேறு இடங்களில் சில மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் ஒரு மணி நேரம் சென்னையில் மிக அதிக அளவில் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் ஒருபுறம் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுபுறம் வெள்ளத்தில் மக்கள் அவதி படவும் செய்கின்றனர். ஆங்காங்கு நீர் தேங்கி காணப்படுகிறது. நேற்று சென்னையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பெய்த மழையில் 65 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தனது கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமலஹாசன் அவர்கள், “ஒரு மணி நேரம் மழை, தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை” எனவும் வடகிழக்கு பருவமழை வரட்டுமா என மிரட்டுகிறது.
கருணை மழையை சேகரிக்க நீர்நிலைகள் தயார் செய்யப்படவில்லை எனவும், கடந்த வெள்ளத்தில் கற்ற பாடம் என ஏதுமில்லை, வடிகால்கள் வார படவும் இல்லை என கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் மருத்துவமனைகளில் நீர் புகுவது எப்பொழுதும் குறையாத நிலையில் இருப்பதால், கரையோர மாவட்டங்கள் மேலும் கடைகண்ணாவது வையுங்கள் எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node