இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம் என கமல் ட்வீட்.
தமிழக சட்டப்பேரவையில் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது, மகளிருக்கான உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். செப்.15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் வைக்கிறார். இந்த திட்டத்துக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.
மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். அந்தவகையில், இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம்.
மேலும், புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன் என்றும் இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.