2026-க்குள் தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தகவல்
தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி, பதில் நேரத்தில் அமைச்சர் பேசுகையில், 2026ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரைப்பாலங்களும் உயர்மட்டப் பாலங்களாக மேம்படுத்தப்பட்டு, தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், மலைப்பகுதிகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் மிகவும் ஆபத்தான வளைவுகளை கொண்ட பகுதிகளில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரூ.100 கோடி மதிப்பில் உருளை விபத்து தடுப்பான் அமைத்து சாலை பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.