Tamil News Live Today: நீட் நுழைவு தேர்வு முடிவுகள் வெளியீடு..! தமிழக மாணவன் முதலிடம்..!

கடந்த மே மாதம் 7-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட்நுழைவு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் நீட் தேர்வின் முடிவுகளை neet.nta.nic.in, ntaresults.nic.in. இணையதளங்களில் பார்க்கலாம். இந்த தேர்வில், தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் 99.99% மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.