புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 2 மணி நேரம் சேலம், கடலூர் மற்றும் கோவை மத்திய சிறைகளில் காவல்துறை சோதனை நடத்தி வருகிறது.
புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.
சேலம் சிறையில் சோதனை புழல் சிறையில் சொகுசு வசதிகள் வழங்கும் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம் சிறையில் சோதனை நடைபெற்றது சேலம் மத்திய சிறையில் காவல் துறை துணை ஆணையர் சுந்தர மூர்த்தி தலைமையில் 40 க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
unknown nodeசேலம், கடலூர் மற்றும் கோவை மத்திய சிறைகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது.கடலூர் மத்திய சிறையில் சிம் கார்டு மற்றும் செல்போன் பேட்டரி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeகோவை மத்திய சிறையில் காலை 6 மணி முதல் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
unknown nodeDINASUVADU