தமிழகத்தின் "தென்பகுதியில் இடியுடன் கூடிய மழை"க்கு வாய்ப்பு வானிலை ஆய்வகம்..!!!

தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

unknown node

இது குறித்து தெரிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் உள் தமிழகத்தில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.

unknown node

மேலும் அரபிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகம் வழியாக இலங்கை கடற்கரை வரை, வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவிவருகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

unknown node

தலைநகர் சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 13 சென்மீட்டர் மழை பதிவாகி உள்ளதுமற்றும் கரூர் பஞ்சப்பட்டியில் 10 சென்டிமீட்டர் மழையும், காரைக்கால் பகுதியில் தலா 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU