தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

அரபிக்கடலில் மஹா புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கையில், அரபிக்கடலில் மையம் கொண்ட புயல், காரணமாக தென்

அரபிக்கடலில் மஹா புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கையில், அரபிக்கடலில் மையம் கொண்ட புயல், காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.மேலும் நெல்லை, தூத்துக்குடி,  கன்னியாகுமரி, ராமநாதபுரம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நமக்கல், திருப்பூர், தேனி, நீலகிரி, கோவை திண்டுக்கல் என மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், இதில் அநேக இடங்களில் கனமழை பெய்ய உள்ளது.மேலும் அரபி கடலோரம் மீனவர்கள் யாரும்  மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.