தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை ..!

வடலூர் ராமலிங்கனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.

வடலூர் ராமலிங்கனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.

இன்று வடலூர் ராமலிங்கனாரின் நினைவு  அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து தமிழகத்தில் சில மாவட்டங்களில்  இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மது விற்பனை செய்ய தடை செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,மதுரை, வேலூர் ,அரியலூர், செங்கல்பட்டு, ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள்கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.