சென்னை :2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தாள் I மற்றும் தாள் II தேர்வுகள் முறையே நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
இருப்பினும், நவம்பர் 1 ஆம் தேதி கிறிஸ்தவ மக்களின் கல்லறைத் திருநாளுடன் முரண்படுவதால், தேர்வு தேதியை மாற்றக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ‘
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ”ஆசிரியர் தேர்வு வாரியzம் இந்தாண்டு (2025) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்- I மற்றும் தாள் – II) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (Website:http://www.trb.tn.gov.in) 11.08.2025 அன்று வெளியிட்டது.
மேற்படி தேர்வுகள் 01.11.2025 மற்றும் 02.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களினால் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் 15.11.2025 அன்று தாள் -I-ம் மற்றும் 16.11.2025 அன்று தாள் – II-ம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல் தேவைப்பட்டால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானwww.trb.tn.gov.inஐப் பார்க்கவும்.
