முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடைபெற்றது .
ஆனால் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வின்போது மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் தவித்தனர்.
இதனால் கணினி வழி தேர்வில் குளறுபடி ஏற்பட்ட இடங்களில் வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும். தொழில்நுட்பக் கோளாறால் தேர்வை முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்தார்.
தேர்வு நடைபெற்ற அதே நேரத்தில் கும்பலாக கூடி விவாதித்தும், மொபைல்போனில் கேட்டும் நிதானமாக விடைகளை எழுதி இருப்பதும் அம்பலமாகியது.போட்டித்தேர்வு பயிற்சி நிறுவனங்களை, மையங்களாக அமைத்ததால், அங்குள்ள பயிற்சியாளர்கள், தேர்வர்கள் காப்பி அடிக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.அதில், முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. தேர்வு நடைபெற்ற 119 மையங்களில், 3 மையங்களில் மட்டுமே தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு நிறுத்திவைக்கப்பட்டது.
திருச்செங்கோட்டில் தேர்வு முடிந்த பின்பு, தேர்வு மையத்திற்குள் செல்போன் அனுமதிக்கப்பட்டது குறித்து ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து விசாரிக்கப்படும். முறைகேடுகள் ஏதும் நடைபெற்றிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…