விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இந்தியாவுக்கு தேஜாஸ் விரைவு வண்டியை அறிமுகம் செய்தது. இது ஒப்பந்த அடிப்படியில் இந்த ரயிலை இயக்கும் வேலைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதன் மூலம் பயணிகளுக்கு உலகத் தரத்திலான வசதிகள் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அகமதாபாத் – மும்பை இடையேயான 2-வது தேஜாஸ் ரயில் அகமதாபாத்தில் தொடங்கி, கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் இயக்கப்படவிருக்கிறது.அந்த வகையில், தமிழகத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு வியாழக்கிழமை தவிர்த்து வாரத்துக்கு 6 நாள்கள் தேஜாஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ப்ரீமியம் ரக ரயிலான அதில், முதலில் பயணிகள் அமருமிடத்தில் எதிரேவுள்ள இருக்கையின் பின்பகுதியில் சிறிய டிவி போன்ற அமைப்பு இருந்தது. அது சரியாக செயல்படுவதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்ததையடுத்து, அதை நீக்க உத்தரவிடப்பட்டது. பிரிமியம் ரக ரயிலான தேஜாஸில் பயணிக்கும் பயணிகள் தரப்பில் இருந்து, பொழுது போக்குக்காக திரைப்படங்கள் போன்றவற்றை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதை பரிசீலித்த தெற்கு ரயில்வே, பயணிகள் தங்களது ஸ்மார்ட் போன்கள், லேப்-டாப்புகளில் திரைப்படங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்வுகளை கண்டுகளிக்கும் வகையில், WI-FIயை அடிப்படையாகக் கொண்ட மேஜிக் பாக்ஸ் (magicbox) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
தேஜாஸ் ரயிலில் பயணிப்போர் செல்போன், லேப் டாப்பில் WI-FIயை ஆன் செய்ததும், மேஜிக் பாக்ஸ் வசதியின் சிக்னல் கிடைக்கும். அந்த சிக்னலுடன் கனெக்ட் செய்ததும், பிறகு பிரவுசர் பகுதிக்கு சென்று மேஜிக் பாக்ஸ் டாட் காம் (magicbox.com) என டைப் செய்ய வேண்டும். பிறகு தம்நெயில் பட்டனை அழுத்தியதும், அதில் பயணி தங்களது விவரத்தை ஒருமுறை பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து பொழுது போக்கு நிகழ்வுகளை பயணிகள் தடையின்றி கண்டுகளிக்கலாம். மேஜிக் பாக்ஸ் வசதியில் ஏற்கெனவே ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களும், சிறார்கள் விரும்பி பார்க்கும் பல்வேறு கார்டூன் நிகழ்ச்சிகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அதில் விருப்பமானவற்றை தேர்வு செய்து பயணநேரத்தின் போது 500 மணி நேரம் வரை கண்டுகளிக்கலாம் என்று தேருக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…