TET தாள் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.! 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை..!

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளில் 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என்று தகவல்.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளில் 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என்று தகவல்.

TN TET என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் மாநில அளவிலான தேர்வு ஆகும். 6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் பணிக்கான (டெட் 2-ம் தாள் தேர்வு) பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 14 வரை கணினி வழியில் நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இந்த தேர்வுக்கு 4 லட்சம் பேர் தகுதி பெற்ற நிலையில் 1.5 லட்சம் பேர் தேர்வுக்கே வரவில்லை என்றும், ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளில் 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.