தஞ்சாவூர் பேருந்து விபத்து... தலா ரூ.3,00,000 முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!

Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy has announced Rs 3 lakh relief for the families of those killed in the Njavur bus accident.

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற தனியார் பேருந்து, வரகூர் கிராமத்திற்கு வந்தபோது சாலையின் ஓரம் இருந்த மின்கம்பி மீது உரசி விபத்துக்குளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் பேருந்து விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், பேருந்து விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 எனவும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.