நோயற்ற வாழ்வை உருவாக்கி தருவதே அரசின் எண்ணம் – முதலமைச்சர் பழனிசாமி

Chief Minister Palanisamy has said that the intention of the TN government is to create a disease free life for the people of Tamil Nadu.

தமிழக அரசின் எண்ணம் நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கி தருவதே ஆகும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் அமைக்கப்பட உள்ள நிலையில் ,இன்று சென்னை ராயபுரத்தில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,இந்த மினி கிளினிக்குகள் ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்  தொடங்கப்பட்டுள்ளது.மினி கிளினிக் தொடங்கப்பட்டதற்கு காரணம் மக்கள் அந்தந்த பகுதிகளிலேயே சிகிச்சை பெறுவதற்காகத் தான்.தமிழக அரசின் எண்ணம் நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கி தருவதே ஆகும்.கடைக்கோடி உள்ள மக்களுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்கத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலே சுகாதாரப் பணிகளில் தமிழகம் முன்னிலை மாநிலமாக உள்ளது.தமிழகம் மருத்துவத் துறையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது .அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.