தமிழகத்தில் சிறந்த காவல் நிலையம் விருது…! லிஸ்டில் 3 மாவட்ட காவல் நிலையம் பெஸ்ட்.!
- நாட்டின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம்
- சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்திலும் ஆளுநரின் கொடியேற்றத்துடன் குடியரசுதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது அதன்படி முதல் இடத்தை கோவை C2 காவல் நிலையமும், இரண்டாம் இடத்தை திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையமும் மூன்றாம் இடத்தை தருமபுரி நகர காவல் நிலையமும் பிடித்து அசத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.