அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட மூன்று பேர் மீதான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். ஜெயலலிதா உருவபொம்மை மீது தேசிய கொடியை போர்த்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், குப்பன், அழகு தமிழ்செல்வி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வாக்காளர்களின் அனுதாபத்தை பெறுவதற்காக நடத்திய ஊர்வலம் எந்த வகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது என நீதிபதி கூறினார். எனவே, தேசிய கொடியை அவமதித்ததாக கருத முடியாது என கூறி மாஃபா பாண்டியராஜன், குப்பன், அழகு தமிழ்செல்வி ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
