#Breaking:4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு;நாளை முதல் மழை குறையும்!

The Chennai Meteorological Department has forecast heavy rains in 4 districts today.

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி,ராமநாதபுரம்,கன்னியாக்குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,நாளை முதல் தமிழகத்தில் மழை குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய மிதமானமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை வடமேற்கு வங்கக்கடல்,மத்திய மேற்கு மற்றும் ஒடிசாவை ஒட்டிய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

unknown node