சென்னை புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

சென்னையில் 46-ஆவது புத்தக காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

சென்னையில் 46-ஆவது புத்தக காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 46-ஆவது புத்தக காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் புத்தக காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

புத்தக காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர். புத்தக காட்சியில் இலங்கை மற்றும் சிங்கப்பூரின் பதிப்பகங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தக காட்சியில் சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய பிரத்யேக அரங்கும் இடம்பெற்றுள்ளது.

46-ஆவது புத்தக காட்சி இன்று முதல் ஜனவரி 22ம் வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தக காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். இந்தாண்டில் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சியை தமிழக அரசு நடத்தவுள்ளது.

தொடக்க நிகழ்ச்சியில் 6 எழுத்தாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பொற்கிழி விருதுகளை வழங்கினார். கலைஞர் பொற்கிழி விருதுகளுடன் தலா ரூ.1 லட்சமும், 9 பேருக்கு பபாசி சார்பில் விருதுகளையும் வழங்கினார்.