ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்.
தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, ரயில்களை இயக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது .
ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மருத்துவ மற்றும் சுகாதார துறையினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.இதனிடையே இன்று மாலை தமிழக ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.தமிழக சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.