முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது-அன்புமணி

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது  என்று அன்புமணி  தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது  என்று அன்புமணி  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது. இந்த ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அந்த தளர்வுகள் நேற்று  முதல் அமல்ப்படுத்தப்பட்டது.எனவே நேற்று   முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் ஊரடங்கு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அந்த ஆலோசனை கூட்டத்தில், மே 3 வரை ஊரடங்கில் எந்த தளர்வு இல்லை  என்று முதலமைச்சர் அறிவித்தார் .

இந்நிலையில் இது  குறித்து பாமக எம்பி அன்புமணி ராமதாஸ்  கூறுகையில்,மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.  கொரோனா பரவல் தடுப்பில் தமிழக அரசு சரியான பாதையில் செல்வதை இது காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.