மகளிர் டிக்கெட்டை கொடுத்து பணம் வாங்கி நடத்துனர் சஸ்பெண்ட் ..!

Suspended conductor who fraudulently bought women's tickets.

மகளிர் டிக்கெட்டை கொடுத்து பணம் வாங்கி மோசடி செய்த நடத்துனர் சஸ்பெண்ட்.

சேலம் நகரப்பேருந்தில் மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து மோசடி செய்த நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சேலத்தில் பேருந்தில் ஏறிய வடமாநில பயணிகளிடம் மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து நடத்துனர் பணம் பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து, பணம் பெற்ற நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தமிழக முதலமைச்சராக பதிவியேற்ற உடன் அரசு பேருந்தில் பயணம் செய்யும் மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் தற்போது தமிழகத்தில் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.