தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள்..! நஷ்டத்துடன் திரும்பிய தமிழக மீனவர்கள்..!

By

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அட்டூழியங்கள் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 

இந்த நிலையில், ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால், மீனவர்கள் நஷ்டத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், திரும்பி வரும் போது படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதால்,  ஒரு படகு சேதம் அடைந்துள்ளது.  மேலும், 100 படகுகள் கரை திரும்பிய நிலையில் படகு ஒன்றுக்கு தலா ரூ.1 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள்  தெரிவித்துள்ளனர்.

Dinasuvadu Media @2023