பிஎஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயற்சித்த நபரை கைது செய்த போலீசார்.
சென்னை கே.கே நகரில் முனிசாமி சாலையில் உள்ள டிபிஎஸ் வங்கி ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் இரவும் மர்ம நபர் சிலர் பெரிய கற்களால் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
இதனை சிசிடிவி-யில் ஹைதராபாத்தில் இருந்து பார்த்த வங்கி அதிகாரி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து, ரோந்து போலீசார் ஏடிஎம் மையம் அருகே வந்தபோது மர்ம நபர்கள் கற்களை அங்கே போட்டுவிட்டு தப்பி சென்றனர்.
இது குறித்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதில் கொள்ளை முயற்சி ஈடுபட்ட நபர் உணவு டெலிவரி செய்யும் நபர் என்பதும் அடையாளம் காணப்பட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் கூறுகையில், மது அருந்த பணம் இல்லாத காரணத்தால் இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளையடிக்கலாம் என்று எண்ணியதாக தெரிவித்துள்ளார்.