7.5 % இட ஒதுக்கீடு – பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை...!

The Directorate of Technical Education has warned engineering colleges not to charge for student admissions that take place under the 7.5% internal reservation.

பொறியியல் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின்கீழ் நடைபெறும்  மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்று பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில்அரசுப்பள்ளிமாணவர்களுக்கு7.5%உள்இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு கடந்த மாதம் அறிவித்திருந்தது.மேலும்,அவர்களுக்கான செலவை அரசே ஏற்கும் என்றும்,இதற்காக ரூ.200 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,7.5% உள் இட ஒதுக்கீட்டின்கீழ் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு எந்த வித கட்டணமும் வசூலிக்க கூடாது என்று பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொறியியல் படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் பேரில் பொறியியல் கல்லூரிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.